Tuesday, November 1, 2016

வீழ்ந்தது விவசாயம்; தாழ்ந்தது தமிழகம்

புதுடில்லி: விவசாயிகளுக்கு உகந்த மாநிலம் குறித்து நிடி ஆயோக் தயாரித்த பட்டியலில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழகம் 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது 
விவசாய துறையில் மாநில அரசு செய்த சீர்திருத்தங்கள் அடிப்படையில், "விவசாயத்துறையில் வணிகம் மற்றும் விவசாயிகளுக்கு உகந்த சீர்திருத்தங்கள்" என்ற தலைப்பில் நிடி ஆயோக் முதன் முறையாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. 
இதில், மகாராஷ்டிரா மாநிலம் 81.7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. விவசாய துறையில் பல சீர்திருத்தங்களை அம்மாநில அரசு செய்துள்ளது. இதனால், இங்கு, யாரும் எளிதாக விவசாய துறையில் முதலீடு செய்யும் சூழல் உருவாகியுள்ளது. குஜராத் மாநில அரசு 71.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் உள்ளது. 

No comments:

Post a Comment